நம்ம கணிப்பு வர வர சரியா வெல செய்ய மாட்டேங்குது :-(
சென்னையோட கடுமையான வெயில் சச்சினப் பாதிச்சு மும்பை இண்டியன்ஸ்க்கு ஆப்படிச்சிடுச்சு. மும்பை பேட்ஸ்மென் உஷாராயிக்கங்கப்பா. எல்லா மேட்சும் சச்சின் மட்டுமே ஆடி ஜெயிச்சுக் குடுக்க முடியாது.தல ஒரு 2, 3 மேட்ச் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து செமி பைனல், பைனல் ஆடுனா போதும்னு நெனக்கிறேன்.
இன்னைக்கு 2 மேட்ச்.
கடைசிவர போராடுற ராஜஸ்தானுக்கும் இனிமே தோக்க என்ன இருக்குன்னு ஆடுற பஞ்சாபுக்கும் போட்டி. பஞ்சாப் போன மேட்ச்ல தாதா டீமத் தோக்கடிச்சு அவங்களோட அரையிறுதி வாய்ப்பைக் கேள்விக்குறியாக்கிட்டாங்க. இன்னைக்கு அதே மாதிரி ராஜஸ்தானும் அதிர்ச்சி கொடுப்பாங்களான்னு பாக்கலாம். ஆனா எனக்கென்னமோ ராஜஸ்தான்தான் ஜெயிக்கும்னு தோணுது.
2ஆவது கொல்கத்தா vs டெல்லி
என் கணிப்பு தாதா டீம் இன்னைக்கு ஜெயிக்கும்.
15 comments:
என்னண்ணே.. ஜெயிக்கப்போற டீம போல்ட் லெட்டர்ல போடுவீங்க, இன்னக்கி போடல. உங்க உலகத்தரமான ப்ரெடிக்ஷன்ல உங்களுக்கே நம்பிக்க போச்சா...
என்னண்ணே செய்றது, முன்னாடியெல்லாம் பாதி வடதான் போச்சு. இப்போ முழுசாவே போகுதே :-((
சரி உங்களுக்காக.
RR
KKR
எமது கருத்துக்கு மதிப்பளித்து மாற்றியமைக்கு நன்றி. தங்களது பொன்னான படைப்புகளுக்கு புக்கர் விருது கிடைக்க வேண்டும். நோபல் பரிசுக்கும் பரிந்துரை செய்கிறேன். நன்றி. வணக்கம்.
தங்களின் எழுத்துப்பணி தொடரட்டும்.
அண்ணே.. புல்லரிக்கிதுண்ணே..
அண்ணே.. இந்த விருத முதல்ல வாங்கிக்கங்கண்ணே..
சிறந்த வடை போச்சே எழுத்தாளர்
ரெண்டாவது விருதையும் வாங்கிக்கங்கண்ணே..
உலக ஜோசியர் விருது...
புக்கர் விருதுக்கு பதிலா இப்போதைக்கு நோட்டர் விருது வாங்கிக்கங்கண்ணே.. அப்பறமா புக்கர் விருது வாங்கித்தர்றேன்..
ஒரு தமிழனா இருந்தும் நீங்க மும்பை இந்தியன்ஸ்க்கு ஆதரவளிக்கிறத பாராட்டி நீத்து அம்பானி உங்களுக்கு இந்த விருத தர்றாங்க..
வேலு நாயக்கர் விருது
நீங்க நல்லவரா கெட்டவராண்ணே..
எங்கள் தானைத்தலைவர், வலையுலகின் சிங்கம், எழுத்துலகின் தங்கம், வலைப்பூ ஆரம்பித்த சில நாட்களிலேயே, ஒரே பதிவிற்கு பத்து பின்னூட்டம் பெற்றுவிட்டார். வாழ்க அவரது பணி, வளர்க அவரது தொண்டு. எல்லாரும் ஜோரா கைதட்டுங்கப்பா..
நன்றிகள் பல.
நன்றி.
But I don't who wrote this & How ?
//A Simple Man said...
நன்றிகள் பல.
//
இன்னக்கி தாண்ணே ரொம்ப நாளைக்கப்பறம் ரெண்டு வடையையும் முழுசா தின்னுருக்கீங்க.. சந்தோஷம்ணே..
ஆமாங்க. Thanks.
//A Simple Man said...
ஆமாங்க. Thanks.//
Boss this is not fair.. Y don't u choose some other name and comment ur view.
Post a Comment