Pages

Saturday, April 3, 2010

ஐ பி எல் 2010 - Day 23

ஐ பி எல் - 2010 - Day 23
ப்ரெட் லீ பாவம்.
மனுஷன் ஒரே ஒவர்ல 25 ரன்னை வாரிக்கொடுத்து வில்லனாயிட்டார்.
லெக் சைட்ல 5 வைட் கொடுக்கறத ஒரு வழக்கமாவே வச்சிருக்கார் கீப்பர் தப்பும்தான், என்ன செய்றது.  காயத்தக்கூட பொருட்படுத்தாம் ஆசையா வெளயாட வந்தவர இப்படியாப்ப படுத்துறது.. அவ்வ்வ் :-(((

இன்னைக்கு 2 மேட்ச்.
1st சென்னை  vsராஜஸ்தான்.

ஏற்கனவே சொன்னமாதிரி 4 ஆவது இடத்துக்கான் கடுமையான போட்டியில இருக்கிற 4 பேர்ல 2பேர். சென்னை சேப்பாக்கத்துல ஆடறதால எப்படியும் ஜெயிக்கனும்னு போராடுவாங்க. எனக்கென்னமோ 2பேருமே பிடிக்கல   :-))
சென்னையோட பலசாலி பேட்டிங் வரிசையில புதுசா ஹஸ்ஸியும் சேந்தாச்சு. ராஜஸ்தானோட ஒரே பேட்டிங் பலசாலி யூசுப் பதானுக்கு உதவ ஷேன் வாட்சன் வந்தாச்சு. கண்டிப்பா மேட்ச் விறுவிறுப்பா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.
எனக்கு சென்னைல பிடுச்ச பாஸ்ட் பௌலர் ஆல்பி மோர்க்கல இன்னைக்கு எப்படியும் தூக்கிடுவாங்க :-(( அதனால, என்னோட கணிப்பு இன்னைக்கு ராஜஸ்தான் ஜெயிக்கும் :-)) இருந்தாலும் அவங்க செமி பைனல் வரக்கூடாது. என்னோட சப்போர்ட் தாதா டீமுக்குத்தான். அவங்க 4 ஆவது இடம் வர இன்னும் சான்ஸ் இருக்கு.

அடுத்த மேட்ச் மும்பை vs டெக்கான்.
தல இன்னைக்கு ஒரு 57 ரன் அடிச்சு மறுபடியும் ஆரஞ்ச் தொப்பிய மாட்டனும். டெக்கான செமி பைனலுக்கு வராம ஓட்டி விடனும். அவ்வளவுதான் :-))

9 comments:

A Simple Man said...

IPL T-20 comment :-))

A Simple Man said...

//எனக்கு சென்னைல பிடுச்ச பாஸ்ட் பௌலர் ஆல்பி மோர்க்கல இன்னைக்கு எப்படியும் தூக்கிடுவாங்க//

cricinfo-ல போட்ருந்த விஷயத்த காப்பி அடிச்சிபுட்டு நீங்களே யூகிச்ச மாதிரி சொல்றீங்களேண்ணே.. இதெல்லாம் ஒரு பொழப்பாண்ணே..?

Anonymous said...

தம்பி.. ரெண்டு வடை குடுப்பா...

A Simple Man said...

//cricinfo-ல போட்ருந்த விஷயத்த காப்பி அடிச்சிபுட்டு நீங்களே யூகிச்ச மாதிரி சொல்றீங்களேண்ணே.. இதெல்லாம் ஒரு பொழப்பாண்ணே..?//
Opinions might be same some times & differ some times. Today I didn't read cricinfo. No problem even if I did.
The good thing Dhoni did today was playing both Morkel & Bollinger over Hussey.

A Simple Man said...

எவ்வளவு குப்புற விழுந்தாலும் மீசையில மாட்டேங்கிது.?

enRenRum-anbudan.BALA said...

நேற்று சென்னை ஜெயித்ததற்கு விஜய்யின் 127 முக்கியம் என்றாலும், பாலிங்கர் 16வது ஓவர் பந்து வீச வந்தபோது, ராஜஸ்தானுக்கு தேவை 71 ரன்கள் - 5 ஓவர்களில், 8 விக்கெட்டுகள் இருந்த நிலையில், (with Watsaon/Ohaja batting fluently) ராஜஸ்தானுக்கும் வெல்ல நல்ல வாய்ப்பு இருந்ததாகவே நான் நம்புகிறேன். பாலிங்கர் ஓவரும், அடுத்த ரெய்னா ஓவரும், வெற்றியை நம் பக்கம் திருப்பின!

உங்களுக்கு சென்னையை பிடிக்காவிட்டால் ப்ரவாயில்லை. அந்த கேடுகெட்ட (வெத்து செலிபிரிட்டிகள் ஏற்றி விடும்!)கொல்கத்தா அணிக்கு ஆதரவு தருவது காமடியாக இருக்கிறது :-)

இன்னிக்கு KXIP KKR-க்கு ஆப்பு வச்சா நன்றாக இருக்கும்! But, KXIP team has now made losing from winning positions into an "artform" ;)

டிவிட்டர்ல என்னை ஃபாலோ செய்கிறீர்களா?

அன்புடன்
பாலா

Anonymous said...

நான் வடை ஆர்டர் பண்ணும்போதெல்லாம் உங்களுக்கு ஒரு வடை போகுதே.. இது தான் நம்மளோட ப்ரடிக்ஷன்?

A Simple Man said...

@anbudan_BALA
நான சொல்ல நெனச்சத அப்டியே சொல்லீட்டீங்க பாஸ். நன்றி.
CSK இப்போ ஆடறத முதல்லேயே ஆடியிருந்தா இப்போ 4ஆவது இடத்துக்கு 4 டீமோட கஷ்டப்பட்டு போட்டி போட வேண்டியதில்ல.
நான் KKRஅ சப்போர்ட் பன்றது முழுக்க முழுக்க தாதாவுக்காக மட்டுமே(அப்டியே கொஞ்சம் CGயோட அதிரடிக்கும்) most important they kicket ponting out of the team :-))
பஞ்சாபோட கடைசி 2 மேட்ச்சும் அப்டியே டெம்ப்ளேட் தோல்வி. அப்படியே தொடர்ந்தா நான்முனை போட்டிக்கு போட்டியில்ல. அவங்களும் CSK மாதிரி ஜெயிக்க ஆரம்பிச்சா அப்புறம் 5 முனைப்போட்டிதான் :-)
Thanks again for visiting my blog.
I'm following you twitter also.
(a_simpleman)

A Simple Man said...

//A Simple Man said...
எவ்வளவு குப்புற விழுந்தாலும் மீசையில மாட்டேங்கிது.?
//
என் ஐடியில வேற யாரோ பின்னூட்டம் போட்டிருக்காங்க :-((
ஆனாலும் உண்மைதான். இந்த விஜய் இப்டி அடிப்பானுன்னு தெரியாதே.
பழைய படங்கள்ல ஹீரோ முதல்ல 3 அடி வாங்கி உதட்டோரமா ரத்தம் வந்ததுக்கப்பறம் வில்லன்கள அடிக்கிற மாதிரி :-))
அதோட போலிஞ்சரோட பௌலிங்கும் கேட்சும் சான்ஸே இல்ல..