Pages

Sunday, May 2, 2010

WC-T20 - Day 3

இன்னைக்கு 2ஆட்டமுமே ரொம்ப பரபரப்பா இருக்கும்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா

இந்தியா தன்னோட வெற்றியத் தொடர்ர ஆர்வத்துல உற்சாகமா ஆடுவாங்க.
தென்னாப்பிரிக்கா வெற்றிக்கணக்க தொடங்கனும்னு ஆடுவாங்க.
இந்தியாவோட ஸ்பின் பௌலிங் சாதகமா இருக்கும். அதே நேரம் ஸ்டெய்ன், மார்க்கலோட பௌன்ஸர எப்படி நம்ம பேட்ஸ்மென் சமாளிக்கிறாங்கன்னு பாக்கணும்.

ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்.

நேத்தைக்கு பங்களாதேஷ் கொஞ்சம் பயம்காட்டினாலும், சமியோட பாஸ்ட் பௌலிங்கால கடைசியில் பாகிஸ்தான் ஜெயிச்சிடிச்சு. அவங்க பேட்டிங்,பௌலிங் எப்பவுவே ஸ்ட்ராங்தான் அதே நேரம் ஒரேயடியா அவுட் ஆப் பார்ம் ஆகுறதும் அப்பப்போ நடக்கும். கடைசியா நடந்த ஆஸ்திரேலியா டூர்ல டெஸ்ட்,ஒன் டே எல்லாத்திலயும் தோத்திட்டு, டி 20 ல ஜெயிக்கிற மாதிரி வந்து கடைசில அதிலயும் தோத்திட்டாங்க. ஆனா இன்னைக்கு பாகிஸ்தான் ஜெயிக்கும்னு தோணுது.

Saturday, May 1, 2010

WC-T20 - Day 2

ஆரம்பம் அமர்க்களமாத்தான் இருந்துச்சு. நியூசிலாந்து கடசி ஓவர்ல த்ரில்லிங்கா ஜெயிச்சிடிச்சு. வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்த நொறுக்கிடிச்சு.


இன்னைக்கும் 2 மேட்ச்.
இந்தியா vs ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தான் அவ்வளவா ஒண்ணும் பெருசா அதிர்ச்சி கொடுக்கும்னு தோணல,யுவராஜ் சிங் பார்முக்கு வர்ராறானு பாக்கணும்.இந்தியா முதல்ல பேட்டிங் பிடிச்சா நல்லது.

2ஆவது மேட்ச் பாகிஸ்தான் vs பங்களாதேஷ்.
பாகிஸ்தான் வார்ம் அப் மேட்ச்ல ஜிம்பாப்வேகிட்ட தோத்த கடுப்புல ஆடுவாங்க. சாம்பியன்ஷிப்ப தக்க வச்சிக்க ரொம்ப போராட வேண்டியிருக்கும் அதனால வெற்றியோட தொடங்க விரும்புவாங்க.