Pages

Friday, April 16, 2010

ஐ பி எல் 2010 - Day 36

நேத்து டெல்லி சென்னையைத் தோக்கடிச்சது கொஞ்சம் ஆறுதலா இருக்கும். கடைசி போட்டியை டென்சன் ஆகாம ஆடி ஜெயிச்சிட்டா எந்த பிரச்சனையும் இல்லாம அரையிறுதிக்கு போயிடலாம். சென்னையோட நிலைமைதான் கொஞ்சம் சிக்கல். அடுத்த மேட்ச்ல கண்டிப்பா ஜெயிக்கணும் அதே நேரம் டெக்கான் ஒரு மேட்ச் தோத்தாத்தான் சென்னைக்கு வாய்ப்பு. அப்டியில்லாம டெக்கான் 2 மேட்சும் ஜெயிச்சிட்டா சென்னைக்கு ஆப்புத்தான். நான் எதிர்ப்பாக்கறது   அதுதான் :-))
இன்னைக்கு பஞ்சாப் vs டெக்கான்.
பஞ்சாப் அரையிறுதிக்கு போகமுடியாத கடுப்புல முடிஞ்ச வரைக்கும் மத்த டீம்களோட வாய்ப்பைக் கெடுக்கப பார்க்கும். இருந்தாலும் மேல சொன்ன மாதிரி டெக்கான் இன்னைக்கு ஜெயிச்சு சென்னைக்கு ஆப்பு வைக்கும். சோ சாரி சென்னை CSK மக்களே :-(

அப்புறம் நேத்து மேட்ச் முடிஞ்சப்பறம், கவுதம் காம்பீர் ரொம்பவே டென்சன் ஆகி ஓப்பனிங் பேட்ஸ்மென் சரியா ஆடலன்னு குறை சொன்னார். குறிப்பா சேவாக் அடிச்சு ஆடி அவுட்டானது தப்புன்னு சொன்னது கொஞ்சம் உறுத்துச்சு. சேவாக் ஆனானப்பட்ட டெஸ்ட் மேட்ச்லயே 70 , 80 ன்னு ஸ்ட்ரைக் ரேட் வச்சிருக்கிற ஆளு. இந்த 20-20 மேட்சுக்கு அப்டித்தான் ஆடுவாரு. அது புடிக்கலன்னா ட்ரெஸ்ஸிங் ரூம்ல இல்லன்னா டீம் மீட்டிங்ல சொல்லனும் அதவிட்டுட்டு இப்படி பொதுவா மேடையில சொல்றது அவ்வளவா நல்லா இல்ல.
சரி, இவ்வளவு கொரஞ்ச ஸ்கோரயும் சேஸ் பண்ணமுடியாம தோத்திருந்தா அரையிறுதி வாய்ப்பு கையவிட்டிப் போயிருக்குமேன்னு ஆதங்கத்துல அப்டி சொல்லிருக்கலாம்னு இந்த ஒரு தடவ லூஸுல விட்ரலாம்.

ஆனா தம்பி காம்பீர், சச்சினுக்கு அப்புறம் நீயும் சேவாக்கும்தான் இந்தியாவுக்கு பெஸ்ட் ஓப்பனிங் பார்ட்னர்ஸ். அத, இந்த ஐபிஎல் மாதிரி சின்ன விசயத்துக்காக சண்ட போட்டு கெடுத்துக்காதீங்கப்பா.

2 comments:

Unknown said...

நைஸ் வொர்க்...

இன்னும் கொஞ்சம் விரிவா எழுதுங்க.. இண்ட்ரஸ்டிங்கா இருக்குது..

A Simple Man said...

நன்றி முகிலன்.
இவ்வளவு விரிவா எழுதுறதே கஷ்டமா இருக்குது :-( முயற்சி பண்றேன்.