Pages

Tuesday, August 7, 2012

Some useful E_Books (Technical)

Here I found some useful Technical E-Books...


http://speedy.sh/MXX2K/BASICS-OF-UNIX-e-Book.pdf
http://speedy.sh/EeeJA/Excel-Macro-VBA.pdf
http://speedy.sh/d22s9/Learning-the-Vi-Editor.pdf
http://speedy.sh/Kssaw/Linux.Complete.Command.Reference.pdf
http://speedy.sh/VJJT4/Mastering-UNIX-Shell-Scripting.pdf
http://speedy.sh/ATTYW/Unix-Shell-Programming.pdf
http://speedy.sh/9aaCh/Unix-Shell-Scripting-Makefiles-X-Windows-Environment.pdf
http://speedy.sh/4YYS7/unixscripting.pdf

Happy Learning....

Tuesday, December 7, 2010

ஆஸ்திரேலியாவுக்கு ஆஆஆஆஆப்பு மேல ஆப்பு

நம்ம பாண்டிங் போஸ் சும்மா சூப்பரா இல்ல...

17 வருசத்துக்குப் பிறகு சொந்த ஊருல இன்னிங்ஸ் தோல்வி.. நொந்த பாண்டிங் கூடிய சீக்கிரமே மீன் பிடிக்க போக வேண்டியதான் ..
இங்கிலாந்து டீமுக்கு வாழ்த்துகள்.
படம் உதவி: கிரிக்இன்போ  

Friday, June 25, 2010

ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு 2


மாப்பு மறுபடியும் வச்சிட்டாங்க ஆப்பு!
 இங்க பாருங்க..
இங்கிலாந்து அடுத்த 3 மேட்ச்லயும் ஜெயிச்சு 5 -௦0 ன்னு ஆஸ்திரேலியாவ௦த் தோக்கடிச்சா இன்னும் ரொம்ப
சந்தோசமா இருக்கும். பார்க்கலாம்.

Wednesday, June 23, 2010

ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு 1

அது என்னமோ தெரியலீங்க, ஆஸ்திரேலியாவுக்கு ஆப்படிச்சா நமக்கு ஒரே சந்தோசமா இருக்குங்க. இப்போ கூட பாருங்க டீவியும் பாக்கல, மேட்ச் எந்த சேனல்ல போடறாங்கன்னும் தெரியல, ஆனாலும் நெட் ஓப்பன் பண்ணி மோர்கனோட முழு இன்னிங்ஸயும் கிரிக்கின்ஃபோல பாத்திட்டே இருந்தேங்க.. அருமையான ஆட்டம். கடைசில செஞ்சுரியும் அடிச்சு 4 ஓவர் மிச்சமும் வச்சு ஆஸ்திரேலியாவுக்கு ஆப்படிச்சாச்சு. இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. ஆஸ்திரேலியா 267/7. இங்கிலாந்து 268/6 .மோர்கன் 103 நாட் அவுட். இங்கிலாந்தின் வெற்றி தொடர வாழ்த்துகள்.

Score Card: Eng vs Aus 1st ODI

Sunday, May 2, 2010

WC-T20 - Day 3

இன்னைக்கு 2ஆட்டமுமே ரொம்ப பரபரப்பா இருக்கும்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா

இந்தியா தன்னோட வெற்றியத் தொடர்ர ஆர்வத்துல உற்சாகமா ஆடுவாங்க.
தென்னாப்பிரிக்கா வெற்றிக்கணக்க தொடங்கனும்னு ஆடுவாங்க.
இந்தியாவோட ஸ்பின் பௌலிங் சாதகமா இருக்கும். அதே நேரம் ஸ்டெய்ன், மார்க்கலோட பௌன்ஸர எப்படி நம்ம பேட்ஸ்மென் சமாளிக்கிறாங்கன்னு பாக்கணும்.

ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்.

நேத்தைக்கு பங்களாதேஷ் கொஞ்சம் பயம்காட்டினாலும், சமியோட பாஸ்ட் பௌலிங்கால கடைசியில் பாகிஸ்தான் ஜெயிச்சிடிச்சு. அவங்க பேட்டிங்,பௌலிங் எப்பவுவே ஸ்ட்ராங்தான் அதே நேரம் ஒரேயடியா அவுட் ஆப் பார்ம் ஆகுறதும் அப்பப்போ நடக்கும். கடைசியா நடந்த ஆஸ்திரேலியா டூர்ல டெஸ்ட்,ஒன் டே எல்லாத்திலயும் தோத்திட்டு, டி 20 ல ஜெயிக்கிற மாதிரி வந்து கடைசில அதிலயும் தோத்திட்டாங்க. ஆனா இன்னைக்கு பாகிஸ்தான் ஜெயிக்கும்னு தோணுது.

Saturday, May 1, 2010

WC-T20 - Day 2

ஆரம்பம் அமர்க்களமாத்தான் இருந்துச்சு. நியூசிலாந்து கடசி ஓவர்ல த்ரில்லிங்கா ஜெயிச்சிடிச்சு. வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்த நொறுக்கிடிச்சு.


இன்னைக்கும் 2 மேட்ச்.
இந்தியா vs ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தான் அவ்வளவா ஒண்ணும் பெருசா அதிர்ச்சி கொடுக்கும்னு தோணல,யுவராஜ் சிங் பார்முக்கு வர்ராறானு பாக்கணும்.இந்தியா முதல்ல பேட்டிங் பிடிச்சா நல்லது.

2ஆவது மேட்ச் பாகிஸ்தான் vs பங்களாதேஷ்.
பாகிஸ்தான் வார்ம் அப் மேட்ச்ல ஜிம்பாப்வேகிட்ட தோத்த கடுப்புல ஆடுவாங்க. சாம்பியன்ஷிப்ப தக்க வச்சிக்க ரொம்ப போராட வேண்டியிருக்கும் அதனால வெற்றியோட தொடங்க விரும்புவாங்க.

Friday, April 30, 2010

WC-T20 - Day 1

WC T20 உலகக்கோப்பை இன்று தொடங்குகிறது.
ஏற்கனவே சொன்னமாதிரி அவ்வளவு ஆர்வம் ஒண்ணுமில்ல.
இருந்தாலும் இந்தியா ஜெயிக்கனும் ஆசையிருக்கு.

தினமும் 2மேட்ச் நடக்கப்போகுது.
இன்னைக்கு நியூசிலாந்தும் இலங்கையும். T20 ல எப்பவுமே நியூசிலாந்து நல்லா ஆடும். இன்னைக்கு அவங்க ஜெயிக்க வாய்ப்பிருக்கு.

இன்னொரு மேட்ச்ல வெஸ்ட் இண்டீஸும் அயர்லாந்தும் மோதுறாங்க.

வெஸ்ட் இண்டீஸ அதுவும் அவங்க நாட்டுலயே தோக்கடிக்க அயர்லாந்து ரொம்ப கஷ்டப்படனும். போன தடவ அயர்லாந்து ஆஸ்திரேலியாவத் தோக்கடிச்ச மாதிரி ஞாபகம். அதே மாதிரி இன்னைக்கும் ஆடினாலொழிய வெஸ்ட் இண்டீஸ் வெற்றிய தடுக்க முடியாது.

Monday, April 26, 2010

IPL3 Final – Review

Finally the dropped catches and slow start cost MI yesterday.
Its ok.Congrats CSK and wish now Dhoni's men(India) perform well in WCT20.
IPL3 was fantastic for the past 7 weeks. Now awaiting MI to do well in the CLT20 in South Africa. Hope they will continue the good form and looking forward to SRT's blast once again. Good to see he got the Golden Player of the tournament award.
See you again next week during WCT20.
Cheers.

Thursday, April 22, 2010

ஐ பி எல் அரையிறுதி 2

டெக்கான் vs சென்னை.

vs

டெக்கான் தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோற்று பிறகு தொடர்ந்து கடைசி5 ஆட்டங்களில் ஜெயித்து இதோ இன்று அரையிறுதியில் சென்னையுடன் மோதுகிறது. சென்னையைப் பொருத்தவரையில் நிலையான ஆட்டம் அமையவில்லை. அரையிறுதி வாய்ப்புகூட ஏதோ அதிர்ஷ்டவசமாக கிடைத்திருக்கிறது.

கில்கிரிஸ்ட்(DC) ஹெய்டன்(CSK)இருவருமே இதுவரை பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை.ஆனால் இன்று கில்லி அதிரடியில் கலக்குவார் என்று நம்பலாம். டெக்கான் சாம்பியன்ஷிப்பைத் தக்க வைத்துக் கொள்வதறகாக கடுமையாகப் போராடும். சென்னை கடைசி மேட்சில் ஆடினமாதிரி இன்றும் ஆட முயலும். பௌலிங்கில் சென்னையை விட டெக்கான் கலக்கும். மொத்தத்தில் சென்னை 3ஆவது இடத்துக்கு பெங்களுரு கூட மோத வேண்டியிருக்கும்.

Wednesday, April 21, 2010

ஐ பி எல் - அரையிறுதி - 1

அரையிறுதி ஆட்டம் தொடங்கியாச்சு.
பெங்களூரிலிருந்து நவிமும்பைக்கு மாத்தினதால பெரிசா ஒண்ணும் வித்தியாசம் இல்ல.
மும்பை vs பெங்களுரு.


vs
மும்பை ஜெயிச்சு முதல் தடவையா அதுவும் முதல் டீமா ஐ பி எல் இறுதிப் போட்டிக்குப் போகுது. (Yes.. It is going to FINAL :-))
பெங்களுரு கொஞ்சம் டெரர் பேட்டிங் இருக்கிற டீம். கல்லிஸ் கடைசி சில மேட்ச்ல (மட்டும்) சரியா ஆடாததுக்குப் பதிலா இன்னைக்குப் பயங்கரமா ஆடப் பாக்கலாம். பீட்டர்சன், ரோஸ் டெய்லர் அப்புறம் உத்தப்பா எல்லோரும் டெரர் பேட்ஸ்மென்.
அதனால என்னோட சாய்ஸ் தல் ஜெயசூர்யாவுக்கு பேட்டிங்,பௌலிங் ரெண்டிலுமே ஓப்பனிங் கொடுக்கனும். மலிங்கா/ஜாகீர் கூட்டணியும் பொல்லார்ட்/பிராவோ கூட்டணியும் கூட ஹர்பஜனும் சேர்ந்து மறுபடியும் ஒரு சூப்பர் பௌலிங் பெர்பார்மன்ஸ் எதிர்பார்க்கலாம்.அபிஷேக் நாயர்கூட சேர்த்துக்கலாம்.
மொத்தத்துல அனல் பறக்கும் ஆட்டம் ரெடி.