Pages

Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Friday, June 25, 2010

ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு 2


மாப்பு மறுபடியும் வச்சிட்டாங்க ஆப்பு!
 இங்க பாருங்க..
இங்கிலாந்து அடுத்த 3 மேட்ச்லயும் ஜெயிச்சு 5 -௦0 ன்னு ஆஸ்திரேலியாவ௦த் தோக்கடிச்சா இன்னும் ரொம்ப
சந்தோசமா இருக்கும். பார்க்கலாம்.

Wednesday, June 23, 2010

ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு 1

அது என்னமோ தெரியலீங்க, ஆஸ்திரேலியாவுக்கு ஆப்படிச்சா நமக்கு ஒரே சந்தோசமா இருக்குங்க. இப்போ கூட பாருங்க டீவியும் பாக்கல, மேட்ச் எந்த சேனல்ல போடறாங்கன்னும் தெரியல, ஆனாலும் நெட் ஓப்பன் பண்ணி மோர்கனோட முழு இன்னிங்ஸயும் கிரிக்கின்ஃபோல பாத்திட்டே இருந்தேங்க.. அருமையான ஆட்டம். கடைசில செஞ்சுரியும் அடிச்சு 4 ஓவர் மிச்சமும் வச்சு ஆஸ்திரேலியாவுக்கு ஆப்படிச்சாச்சு. இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. ஆஸ்திரேலியா 267/7. இங்கிலாந்து 268/6 .மோர்கன் 103 நாட் அவுட். இங்கிலாந்தின் வெற்றி தொடர வாழ்த்துகள்.

Score Card: Eng vs Aus 1st ODI

Sunday, May 2, 2010

WC-T20 - Day 3

இன்னைக்கு 2ஆட்டமுமே ரொம்ப பரபரப்பா இருக்கும்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா

இந்தியா தன்னோட வெற்றியத் தொடர்ர ஆர்வத்துல உற்சாகமா ஆடுவாங்க.
தென்னாப்பிரிக்கா வெற்றிக்கணக்க தொடங்கனும்னு ஆடுவாங்க.
இந்தியாவோட ஸ்பின் பௌலிங் சாதகமா இருக்கும். அதே நேரம் ஸ்டெய்ன், மார்க்கலோட பௌன்ஸர எப்படி நம்ம பேட்ஸ்மென் சமாளிக்கிறாங்கன்னு பாக்கணும்.

ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்.

நேத்தைக்கு பங்களாதேஷ் கொஞ்சம் பயம்காட்டினாலும், சமியோட பாஸ்ட் பௌலிங்கால கடைசியில் பாகிஸ்தான் ஜெயிச்சிடிச்சு. அவங்க பேட்டிங்,பௌலிங் எப்பவுவே ஸ்ட்ராங்தான் அதே நேரம் ஒரேயடியா அவுட் ஆப் பார்ம் ஆகுறதும் அப்பப்போ நடக்கும். கடைசியா நடந்த ஆஸ்திரேலியா டூர்ல டெஸ்ட்,ஒன் டே எல்லாத்திலயும் தோத்திட்டு, டி 20 ல ஜெயிக்கிற மாதிரி வந்து கடைசில அதிலயும் தோத்திட்டாங்க. ஆனா இன்னைக்கு பாகிஸ்தான் ஜெயிக்கும்னு தோணுது.

Saturday, May 1, 2010

WC-T20 - Day 2

ஆரம்பம் அமர்க்களமாத்தான் இருந்துச்சு. நியூசிலாந்து கடசி ஓவர்ல த்ரில்லிங்கா ஜெயிச்சிடிச்சு. வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்த நொறுக்கிடிச்சு.


இன்னைக்கும் 2 மேட்ச்.
இந்தியா vs ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தான் அவ்வளவா ஒண்ணும் பெருசா அதிர்ச்சி கொடுக்கும்னு தோணல,யுவராஜ் சிங் பார்முக்கு வர்ராறானு பாக்கணும்.இந்தியா முதல்ல பேட்டிங் பிடிச்சா நல்லது.

2ஆவது மேட்ச் பாகிஸ்தான் vs பங்களாதேஷ்.
பாகிஸ்தான் வார்ம் அப் மேட்ச்ல ஜிம்பாப்வேகிட்ட தோத்த கடுப்புல ஆடுவாங்க. சாம்பியன்ஷிப்ப தக்க வச்சிக்க ரொம்ப போராட வேண்டியிருக்கும் அதனால வெற்றியோட தொடங்க விரும்புவாங்க.

Monday, April 26, 2010

IPL3 Final – Review

Finally the dropped catches and slow start cost MI yesterday.
Its ok.Congrats CSK and wish now Dhoni's men(India) perform well in WCT20.
IPL3 was fantastic for the past 7 weeks. Now awaiting MI to do well in the CLT20 in South Africa. Hope they will continue the good form and looking forward to SRT's blast once again. Good to see he got the Golden Player of the tournament award.
See you again next week during WCT20.
Cheers.

Thursday, April 22, 2010

ஐ பி எல் அரையிறுதி 2

டெக்கான் vs சென்னை.

vs

டெக்கான் தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோற்று பிறகு தொடர்ந்து கடைசி5 ஆட்டங்களில் ஜெயித்து இதோ இன்று அரையிறுதியில் சென்னையுடன் மோதுகிறது. சென்னையைப் பொருத்தவரையில் நிலையான ஆட்டம் அமையவில்லை. அரையிறுதி வாய்ப்புகூட ஏதோ அதிர்ஷ்டவசமாக கிடைத்திருக்கிறது.

கில்கிரிஸ்ட்(DC) ஹெய்டன்(CSK)இருவருமே இதுவரை பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை.ஆனால் இன்று கில்லி அதிரடியில் கலக்குவார் என்று நம்பலாம். டெக்கான் சாம்பியன்ஷிப்பைத் தக்க வைத்துக் கொள்வதறகாக கடுமையாகப் போராடும். சென்னை கடைசி மேட்சில் ஆடினமாதிரி இன்றும் ஆட முயலும். பௌலிங்கில் சென்னையை விட டெக்கான் கலக்கும். மொத்தத்தில் சென்னை 3ஆவது இடத்துக்கு பெங்களுரு கூட மோத வேண்டியிருக்கும்.

Wednesday, April 21, 2010

ஐ பி எல் - அரையிறுதி - 1

அரையிறுதி ஆட்டம் தொடங்கியாச்சு.
பெங்களூரிலிருந்து நவிமும்பைக்கு மாத்தினதால பெரிசா ஒண்ணும் வித்தியாசம் இல்ல.
மும்பை vs பெங்களுரு.


vs
மும்பை ஜெயிச்சு முதல் தடவையா அதுவும் முதல் டீமா ஐ பி எல் இறுதிப் போட்டிக்குப் போகுது. (Yes.. It is going to FINAL :-))
பெங்களுரு கொஞ்சம் டெரர் பேட்டிங் இருக்கிற டீம். கல்லிஸ் கடைசி சில மேட்ச்ல (மட்டும்) சரியா ஆடாததுக்குப் பதிலா இன்னைக்குப் பயங்கரமா ஆடப் பாக்கலாம். பீட்டர்சன், ரோஸ் டெய்லர் அப்புறம் உத்தப்பா எல்லோரும் டெரர் பேட்ஸ்மென்.
அதனால என்னோட சாய்ஸ் தல் ஜெயசூர்யாவுக்கு பேட்டிங்,பௌலிங் ரெண்டிலுமே ஓப்பனிங் கொடுக்கனும். மலிங்கா/ஜாகீர் கூட்டணியும் பொல்லார்ட்/பிராவோ கூட்டணியும் கூட ஹர்பஜனும் சேர்ந்து மறுபடியும் ஒரு சூப்பர் பௌலிங் பெர்பார்மன்ஸ் எதிர்பார்க்கலாம்.அபிஷேக் நாயர்கூட சேர்த்துக்கலாம்.
மொத்தத்துல அனல் பறக்கும் ஆட்டம் ரெடி.

Saturday, April 17, 2010

ஐ பி எல் 2010 - Day 37

நேத்து மேட்ச்ல டெக்கான் ஜெயிச்சு அரைஇறுதி வாய்ப்பைக்கான வாய்ப்பை இன்னும் இழக்காம இருக்காங்க. இருந்தாலும் அடுத்த மேட்ச்ல டெல்லிய தோக்கடிச்சா ரன் ரேட்டப் பத்திக் கவலைப் படாம ஈசியா அரையிறுதிக்குப் போயிடலாம். இல்லன்னா சென்னை பஞ்சாப்கிட்ட தோக்கணும்னு வேண்டிக்கணும்.


பஞ்சாபோட பேட்டிங்க பார்க்கும்போது அவங்க கடைசி மேட்ச்ல சென்னையைத் தோக்கடிக்க நல்ல வாய்ப்பிருக்கு. பார்க்கலாம். இன்னும்கூட டெல்லி/டெக்கான்/சென்னை போட்டி சுவாரஸ்யமாத்தான் இருக்கு. கொல்கத்தா இன்னைக்கு ராஜஸ்தான தோக்கடிச்சு அப்புறம் மும்பையையும் ஜெயிச்சிக்கிறது அவ்வளவு ஈசியில்ல.

பெங்களூரு வெறும் 7 மேட்ச்ல மட்டும் ஜெயிச்சு நல்ல ரன்ரேட்டால அரையிறுதிக்குப் போறது நமக்குப் பிடிக்கல :-((என்ன பண்றது. அதான் கிரிக்கெட்.

இன்னைக்கு 2 மேட்ச்

முதல்ல மும்பை vs பெங்களுரு.
முதல்ல தோத்ததுக்கு மும்பை இன்னைக்கு பழி வாங்கனும்.
தல ஒரு 50 இல்ல 100 அடிக்கணும்.

2ஆவது ராஜஸ்தான் vs கொல்கத்தா.
இனிமே ஐ பி எல் ஆடப் போறதில்லன்னு ஷேன் வார்ன் சொல்லிருக்கார். அது உண்மைன்னா இதுதால் ஐபிஎல் அவரோட கடைசி மேட்சா இருக்கும்.
அதனால ஜெயிக்கனும்னு வெறியோட ஆடுவாங்க.இருந்தாலும் என்னோட சாய்ஸ் தாதா டீம்தான் ஜெயிக்கும்.

Friday, April 16, 2010

ஐ பி எல் 2010 - Day 36

நேத்து டெல்லி சென்னையைத் தோக்கடிச்சது கொஞ்சம் ஆறுதலா இருக்கும். கடைசி போட்டியை டென்சன் ஆகாம ஆடி ஜெயிச்சிட்டா எந்த பிரச்சனையும் இல்லாம அரையிறுதிக்கு போயிடலாம். சென்னையோட நிலைமைதான் கொஞ்சம் சிக்கல். அடுத்த மேட்ச்ல கண்டிப்பா ஜெயிக்கணும் அதே நேரம் டெக்கான் ஒரு மேட்ச் தோத்தாத்தான் சென்னைக்கு வாய்ப்பு. அப்டியில்லாம டெக்கான் 2 மேட்சும் ஜெயிச்சிட்டா சென்னைக்கு ஆப்புத்தான். நான் எதிர்ப்பாக்கறது   அதுதான் :-))
இன்னைக்கு பஞ்சாப் vs டெக்கான்.
பஞ்சாப் அரையிறுதிக்கு போகமுடியாத கடுப்புல முடிஞ்ச வரைக்கும் மத்த டீம்களோட வாய்ப்பைக் கெடுக்கப பார்க்கும். இருந்தாலும் மேல சொன்ன மாதிரி டெக்கான் இன்னைக்கு ஜெயிச்சு சென்னைக்கு ஆப்பு வைக்கும். சோ சாரி சென்னை CSK மக்களே :-(

அப்புறம் நேத்து மேட்ச் முடிஞ்சப்பறம், கவுதம் காம்பீர் ரொம்பவே டென்சன் ஆகி ஓப்பனிங் பேட்ஸ்மென் சரியா ஆடலன்னு குறை சொன்னார். குறிப்பா சேவாக் அடிச்சு ஆடி அவுட்டானது தப்புன்னு சொன்னது கொஞ்சம் உறுத்துச்சு. சேவாக் ஆனானப்பட்ட டெஸ்ட் மேட்ச்லயே 70 , 80 ன்னு ஸ்ட்ரைக் ரேட் வச்சிருக்கிற ஆளு. இந்த 20-20 மேட்சுக்கு அப்டித்தான் ஆடுவாரு. அது புடிக்கலன்னா ட்ரெஸ்ஸிங் ரூம்ல இல்லன்னா டீம் மீட்டிங்ல சொல்லனும் அதவிட்டுட்டு இப்படி பொதுவா மேடையில சொல்றது அவ்வளவா நல்லா இல்ல.
சரி, இவ்வளவு கொரஞ்ச ஸ்கோரயும் சேஸ் பண்ணமுடியாம தோத்திருந்தா அரையிறுதி வாய்ப்பு கையவிட்டிப் போயிருக்குமேன்னு ஆதங்கத்துல அப்டி சொல்லிருக்கலாம்னு இந்த ஒரு தடவ லூஸுல விட்ரலாம்.

ஆனா தம்பி காம்பீர், சச்சினுக்கு அப்புறம் நீயும் சேவாக்கும்தான் இந்தியாவுக்கு பெஸ்ட் ஓப்பனிங் பார்ட்னர்ஸ். அத, இந்த ஐபிஎல் மாதிரி சின்ன விசயத்துக்காக சண்ட போட்டு கெடுத்துக்காதீங்கப்பா.

Thursday, April 15, 2010

ஐ பி எல் 2010 - Day 35

நேத்து மேட்ச்ல பெங்களுரு ஜெயிச்சு ஒருவழியா தன்னோட அரையிறுதி வாய்ப்பை ஓரளவுக்கு உறுதிப்படுத்தியாச்சு.
இன்னைக்கு சென்னை vs டெல்லி.
2  பேருக்குமே முக்கியமான போட்டி தொடர்ந்த தோல்விகளால் துவழ்ந்து போயிருக்கும் டெல்லி இன்னைக்கு சேவாக், கம்பீர் எல்லாம் கண்டிப்பா நல்ல ரன்கள் எடுத்தே ஆகவேண்டிய கட்டாயம். சென்னை சேப்பாக்கத்தில் முதலில்  சில தோல்விகளை  அடுத்து   தொடர்ந்து CSK ஜெயிச்சிட்டு வரது  தோனிக்கு தெம்பா இருக்கும். இன்னைக்கும ஜெயிச்சிட்டா இன்னும் கூட தெம்பா இருக்கும். ஆனா எனக்கென்னமோ இன்னைக்கு டெல்லி ஜெயிக்கும்னு தோணுது.

Tuesday, April 13, 2010

ஐ பி எல் 2010 - Day 33

நேத்து டெக்கான் பெங்களூர தோக்கடிச்சும் இன்னும் 5ஆவது இடத்திலதன் இருக்காங்க. ரன் ரேட் ரொம்ப கம்மியா இருக்கிறதால அவங்களோட அரையிறுதி வாய்ப்புக்கு இன்னும் எல்லா மேட்ச்லயும் அதிக ரன்ரேட்ல ஜெய்க்கனும்.


இன்னைக்கு CSK vs KKR
சென்னைக்கும் கல்கத்தாவுக்கும் உள்ளே வெளியே போட்டி.
தோக்கறவங்க கதி அதோகதி. சென்னை டீம் கன்சிஸ்டன்சி இல்லாம ஆடுறாங்க.
எனக்கென்னமோ தாதா டீம் இன்னைக்கு ஜெயிக்கும்னு தோணுது.

Monday, April 12, 2010

ஐ பி எல் 2010 - Day 32

நெனச்ச மாதிரியே செமி பைனலுக்கு முதல் டீமா மும்பை இண்டியன்ஸ் போயாச்சு.


இன்னைக்கு மேட்ச் டெக்கான் vs பெங்களூரு. போன தடவ டெக்கான் சுமன் மற்றும் சைமண்ட்ஸோட அதிரடியால ஈசியா ஜெயிச்சிடிச்சு. இன்னைக்கும் அதே மாதிரி ஜெயிக்கும்னு நினைக்கிறேன்.

4ஆவது இடத்துக்காக 2 டீமுமே கடுமையா போராடும்.