Pages

Thursday, April 8, 2010

ஐ பி எல் 2010 - Day 28

ஐ பி எல் 2010 - Day 28

கொஞ்ச நாளா எதிர்பாராத முடிவுகளா வந்திட்டிருக்கு.
இன்னைக்கு டெக்கான் பெங்களுரு மேட்ச்.
2 பேருமே கடைசி மேட்ச்ல தோத்த கடுப்புல ஆடுவாங்க. என்னதான் டெக்கானுக்கு அரையிறுதி வாய்ப்பு ரொம்ப கம்மின்னாலும் பெங்களுரு இன்னைக்குத் தோத்தா போட்டி ரொம்ப சுவாரசியமா இருக்கும். இன்னைக்கு என்னோட கணிப்பு டெக்கான் ஜெயிக்கும்.

ஐ பி எல் 2010 - Day 29
KXIP vs MI

ஐ பி எல் 2010 - Day 30
DC vs CSK
RCB vs KKR

ஐ பி எல் 2010 - Day 31
DD vx KXIP
RR vs MI

Wednesday, April 7, 2010

உதவி தேவை

எழுத்தாளர் முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குத் தங்களால் இயன்ற உதவியை அருளவும். மேலும் விவரங்களுக்கு இந்தப்
பதிவைப் பார்க்கவும்.நன்றி

http://nchokkan.wordpress.com/2010/04/07/muthuraman/

ஐ பி எல் 2010 - Day 27

நம்ம கணிப்பு வர வர சரியா வெல செய்ய மாட்டேங்குது :-(
சென்னையோட கடுமையான வெயில் சச்சினப் பாதிச்சு மும்பை இண்டியன்ஸ்க்கு ஆப்படிச்சிடுச்சு. மும்பை பேட்ஸ்மென் உஷாராயிக்கங்கப்பா.  எல்லா மேட்சும் சச்சின் மட்டுமே ஆடி ஜெயிச்சுக் குடுக்க முடியாது.தல ஒரு 2, 3 மேட்ச் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து செமி பைனல், பைனல் ஆடுனா போதும்னு நெனக்கிறேன்.

இன்னைக்கு 2 மேட்ச்.

கடைசிவர போராடுற ராஜஸ்தானுக்கும் இனிமே தோக்க என்ன இருக்குன்னு ஆடுற பஞ்சாபுக்கும் போட்டி. பஞ்சாப் போன மேட்ச்ல தாதா டீமத் தோக்கடிச்சு அவங்களோட அரையிறுதி வாய்ப்பைக் கேள்விக்குறியாக்கிட்டாங்க. இன்னைக்கு அதே மாதிரி ராஜஸ்தானும் அதிர்ச்சி கொடுப்பாங்களான்னு பாக்கலாம். ஆனா எனக்கென்னமோ ராஜஸ்தான்தான் ஜெயிக்கும்னு தோணுது.

2ஆவது கொல்கத்தா vs டெல்லி

என் கணிப்பு தாதா டீம் இன்னைக்கு ஜெயிக்கும்.

Tuesday, April 6, 2010

ஐ பி எல் 2010 - Day 26

ஐ பி எல் 2010 - Day 26

6 பந்தில் 6 ரன் தேவை.கைவசம் 3 விக்கெட்டுகள். அப்படியும் தோற்கிறார்கள் டெக்கான் சார்ஜர்ஸ். இந்தியா அல்லது தெ.ஆப்பிரிக்கா ஒரு நாள் அணிக்குத் தகுதியாகலாம் :-)
மறுபடியும் ஷேன் வார்ன் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்த போட்டி. கடைசி ஓவர் வீசிய திரிவேதியும் அருமையாக பந்து வீசி ரோகித் சர்மாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தி ராயல்ஸ் ஜெயிக்க வழிவகுத்தார்.

ஆகமொத்தம் சென்னைக்கு பெரிய ஆப்பு அடிக்கப்பட்டிருக்கு. இன்னைக்கு மும்பைகிட்ட தோத்ததும் மீதி உள்ள 4 மேட்சும் ஜெயிச்சாத்தான் அரை இறுதி வாய்ப்பு.

Monday, April 5, 2010

ஐ பி எல் 2010 - Day 25

ஐ பி எல் 2010 - Day 25

நேத்தும் வழக்கம்போல பாதிக்குப்பாதி :-(


மகேளாவோட சதத்தால கொல்கத்தா வெற்றிவாய்ப்பை இழந்தது. 4ஆவது இடத்துக்கான அருமையான வாய்ப்பும் போச்சு. ஆனா இன்னும் வாய்ப்பிருக்கு.

இன்னைக்கு மேட்ச் டெக்கான் vs  ராஜஸ்தான்.

அதென்னமோ தெரியல ராஜஸ்தான் மக்களுக்கு 200க்கு மேல (மட்டும்) பெரிய ஸ்கோர துரத்த சொன்னா  வேகமா ஆடுறாங்க. அப்டியும் கடசில கோட்ட விட்றாங்க. :-))

இன்னைக்கும் அப்டித்தான் ஆகும்னு பட்சி சொல்லுது

Sunday, April 4, 2010

நான் விரிச்ச வலையிலே நானே

நம்ம பெனாத்தலாரோட டிவிட்டர் பக்கம் மேஞ்சிட்டு இருந்தப்ப இந்த வரியப் பாத்ததும் கொஞ்ச நாள் முன்ன ரசிச்ச ஒரு வீடியோ ஞாபகம் வந்துச்சு.  இங்கே.

 

The Big Short: Inside the Doomsday Machine
Valleys Of Neptune
Valleys Of Neptune

ஐ பி எல் - 2010 - Day 24

ஐ பி எல் - 2010 - Day 24
நேத்து விஜயும் போலிங்கரும் CSK க்கு 4ஆவது வெற்றியைக் கொடுத்து 4ஆவது இடத்துக்கான் போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்கிட்டாங்க.
இன்னைக்கும் 2 மேட்ச்.
டெல்லி vs பெங்களுரு மேட்ச்ல ஒண்ணும் பெரிய எதிர்பார்ப்பில்ல. ஜெயிக்கிறவங்க 2ஆவது இடம். டெல்லி ஜெயிக்கனும்.
பஞ்சாப் vs கொல்கத்தா. இன்னைக்கு தாதா டீம் ஜெயிச்சு மேல சொன்ன போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்கனும் அவ்வளவுதான்.

Saturday, April 3, 2010

ஐ பி எல் 2010 - Day 23

ஐ பி எல் - 2010 - Day 23
ப்ரெட் லீ பாவம்.
மனுஷன் ஒரே ஒவர்ல 25 ரன்னை வாரிக்கொடுத்து வில்லனாயிட்டார்.
லெக் சைட்ல 5 வைட் கொடுக்கறத ஒரு வழக்கமாவே வச்சிருக்கார் கீப்பர் தப்பும்தான், என்ன செய்றது.  காயத்தக்கூட பொருட்படுத்தாம் ஆசையா வெளயாட வந்தவர இப்படியாப்ப படுத்துறது.. அவ்வ்வ் :-(((

இன்னைக்கு 2 மேட்ச்.
1st சென்னை  vsராஜஸ்தான்.

ஏற்கனவே சொன்னமாதிரி 4 ஆவது இடத்துக்கான் கடுமையான போட்டியில இருக்கிற 4 பேர்ல 2பேர். சென்னை சேப்பாக்கத்துல ஆடறதால எப்படியும் ஜெயிக்கனும்னு போராடுவாங்க. எனக்கென்னமோ 2பேருமே பிடிக்கல   :-))
சென்னையோட பலசாலி பேட்டிங் வரிசையில புதுசா ஹஸ்ஸியும் சேந்தாச்சு. ராஜஸ்தானோட ஒரே பேட்டிங் பலசாலி யூசுப் பதானுக்கு உதவ ஷேன் வாட்சன் வந்தாச்சு. கண்டிப்பா மேட்ச் விறுவிறுப்பா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.
எனக்கு சென்னைல பிடுச்ச பாஸ்ட் பௌலர் ஆல்பி மோர்க்கல இன்னைக்கு எப்படியும் தூக்கிடுவாங்க :-(( அதனால, என்னோட கணிப்பு இன்னைக்கு ராஜஸ்தான் ஜெயிக்கும் :-)) இருந்தாலும் அவங்க செமி பைனல் வரக்கூடாது. என்னோட சப்போர்ட் தாதா டீமுக்குத்தான். அவங்க 4 ஆவது இடம் வர இன்னும் சான்ஸ் இருக்கு.

அடுத்த மேட்ச் மும்பை vs டெக்கான்.
தல இன்னைக்கு ஒரு 57 ரன் அடிச்சு மறுபடியும் ஆரஞ்ச் தொப்பிய மாட்டனும். டெக்கான செமி பைனலுக்கு வராம ஓட்டி விடனும். அவ்வளவுதான் :-))

Friday, April 2, 2010

ஐ பி எல் 2010 - Day 22

ஐ பி எல் 2010 - Day 22.


நேத்து தாதா ஏமாத்தாம அருமையா ஆடி ஜெயிச்சிட்டாரு. என்ன ஒண்ணு கடைசியில கொஞ்சம் பொறுமையா ஆடியிருந்தா சதம் அடிச்சிருக்கலாம். பரவாயில்ல. இப்போ 4ஆவது இடத்துக்கு கடுமையான போட்டி.

இன்னைக்கு மேட்ச் பஞ்சாப் vs.பெங்களுரு.
நல்லா போய்கிட்டிருந்த பெங்களுரு கடைசி மேட்ச்ல சென்னைகிட்ட தோத்த கடுப்புல இன்னைக்கு ஆடுவாங்க.அதே மாதிரி பஞ்சாபும் கடைசி மேட்ச்ல மும்பைகூட ஜெயிக்கிற மாதிரி வந்து தோத்துட்ட கடுப்புல இருக்காங்க.உட்கட்சி பூசல் வேற :-))
பஞ்சாப்க்கு பேட்டிங் இதுவரைக்கும் சரியா க்ளிக் ஆகல.பௌலிங்கும் அவ்வளவு சூப்பரா இல்ல.
இன்னைக்கு மார்ஸ் பேட்டிங் பொருத்துதான் அவங்களால நல்ல ஸ்கோர் எடுக்க முடியும்.
ஆனாலும் இன்னைக்கு என்னோட கணிப்பு பெங்களுரு ஜெயிக்கும்.

Thursday, April 1, 2010

ஐ பி எல் 2010 - Day 21

நேத்து நம்ம கணிப்பு பாதிக்குப் பாதிதான் சரியா இருந்துச்சு.


சென்னை டீம் 'வேட்டைக்காரன்' விஜயோட அதிரடியில ரொம்ப ஈசியா ஜெயிச்சிட்டாங்க.. சென்னையில தொடர்ந்து 2 தடவ தோத்ததுக்கு அப்புறம் 3ஆவது மேட்ச்ல ஜெயிச்சிருக்காங்க. ஆனாலும் செமி பைனல் போகனும்னா மீதி எல்லா மேட்சும் இதே மாதிரி ஜெயிக்கனுமே.. பாக்கலாம்..

அப்புறம் டெல்லியும் இன்னொரு தமிழன் தினேஷ் கார்த்திக் அதிரடியில ரொம்ப ஈசியா ஜெயிச்சிட்டாங்க. அப்படியே 2ஆவது இடத்துக்கும் வந்துட்டாங்க. சேவாக் இன்னும் சரியா ஆட ஆரம்பிக்கல.. எப்படியும் செமி பைனல் வரைக்கும் போயிடுவாங்க.. போன 2 தடவையுமே பைனலுக்கு போக முடியல. இந்த தடவ எப்படின்னு பாக்கலாம்..

அப்புறம் இன்னைக்கு மேட்ச் KKR vs DC. தாதா டீம் செமி பைனல் வரனும்னு நான் ஆசப்படற மாதிரி அவங்க ஆசப்படறதா தெரியல :-) ஆனாலும் மேட்ச் கொல்கத்தால நடக்குறதால கொஞ்சம் நல்லா விளையாடி ஜெயிப்பாங்கன்னு தோணுது பாக்கலாம்..